சிபிஐ, EDயின் பிடியில் இருந்த லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் - நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

பணமோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், முன்னாள் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிடோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. நிலத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு ரயில்வே துறையில் வேலை அளித்த புகார் தொடர்பான சிபிஐ வழக்கின் அடிப்படையில் அமலாக்க துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அக்டோபர் 7இல் ஆஜராகும்படி

சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். மூவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பிணைய பத்திரத்தின் பேரில் ஜாமீன் வழங்கிய

டெல்லி சிறப்பு நீதிமன்றம், விசாரணையை அக்டோபர் 25ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்