தமிழகத்திற்கு காவிரி நீர்... சூட்டோடு சூடாக கர்நாடகாவுக்கு அதிரடி உத்தரவு
தமிழகத்திற்கு காவிரி நீர்... சூட்டோடு சூடாக கர்நாடகாவுக்கு அதிரடி உத்தரவு
காவிரியில் ஆகஸ்ட் மாதத்திற்கான 45.95 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 100-வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து ஆகஸ்டு மாதத்திற்கு நீர் பங்கீடு செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது. இதில்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்கான 45.95 டி.எம்.சி. நீரை திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Next Story