காவிரி நீர் பங்கீடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
காவிரி விவகாரத்தில் பதில் அளிக்கும் வகையில்கர்நாடக அரசு சார்பில் இந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், காவிரி நீர் பங்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டியது இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது. காவிரியில் இருந்து திறக்கப்பட்ட நீரை தமிழ்நாடு அரசு முறையாக பயன்படுத்தவில்லை எனவும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் கர்நாடக அரசு அமல்படுத்தி வருவதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டி இருந்தால் நீர் தட்டுப்பாடு வந்திருக்காது என்றும் நீதியின் நலன் கருதி தமிழ்நாடு அரசின் மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் கர்நாடகா அரசு வலியுறுத்தியுள்ளது.
Next Story