காவிரி நீர் விவகாரம்...உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்க மனு

x

அதில், குறுவை சாகுபடிக்காக உரிய நீரை விட கூடுதல் நீரை கர்நாடகா திறந்து விட்டதாக கூறியதில் முற்றிலும் உண்மை இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், காவிரி நீரை தமிழ்நாடு அரசு முறையாக பயன்படுத்தவில்லை என்று கர்நாடகம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்து விட்டால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்ற கர்நாடகத்தின் நிலைப்பாடு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது எனக் கூறியுள்ள தமிழக அரசு, கர்நாடக அரசு உரிய நீரை திறந்துவிடுவதை உறுதி செய்ய, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்