காவிரி விவகாரம்...நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்ட வீடியோ

x

கர்நாடகா விவசாயிகளுக்கு ஆதரவாக காவிரி விவகாரத்தில் கன்னட நடிகர்கள் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்..கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தினசரி 5 ஆயிரம் கன அடி நீரைத் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னட நடிகர்கள் பலரும் தற்போது குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். குறிப்பாக கர்நாடகாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் சிவராஜ்குமார் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கர்நாடகாவில் மழை குறைவு காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு இரு மாநில தலைவர்களும் நீதிமன்றமும் காவிரி விவகாரத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல் நடிகர்கள் கிச்சா சுதீப், தர்ஷன், உபேந்திரா, துனியா விஜய் உள்ளிட்ட பல நடிகர்களும் காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகளை பாதிக்காத வண்ணம் முடிவுகளை எடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்