காவிரி விவகாரம்..! தமிழக அரசு சொன்ன வார்த்தை... உடனே ஆக்ஷன் எடுத்த உச்ச நீதிமன்றம் | Kaveri River
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23 வது ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டத்தில், தமிழகத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில், காவிரியில் இருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை கூட்டத்தை கூட்டி ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 1-க்கு ஒத்தி வைத்தது. இதனையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம், இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
Next Story