காவிரி விவகாரம்..! டெல்லி செல்லும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
காவிரியில் இருந்து நடுவர்மன்ற உத்தரவின்படி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறக்காமல் இருப்பதாக குற்றம்சாட்டி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனுவை விசாரணை நடத்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், தண்ணீர் திறப்பது தொடர்பாக கர்நாடக தரப்பு வழக்கறிஞர்கள் சிறப்பாக வாதாடியதாக தெரிவித்தார். 3 ஆயிரம் கனஅடி நீர் கோரிக்கை வைத்த நிலையில், 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த அவர், கர்நாடகாவின் நீர் ஆதாரத்தை காப்பாற்றும் வகையில், வழக்கறிஞர்களை சந்தித்து யோசனைகள் மற்றும் மாநிலத்தின் நிலையை எடுத்துரைக்க உள்ளதாக கூறினார். இதற்காக, டெல்லி செல்ல உள்ளதாக டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
Next Story