"Cancel செய்யப்படும் ரயில் டிக்கெட் பணம்எத்தனை நாளில் திரும்ப வந்து சேரும்" - ரயில்வே அமைச்சர் தகவல்
ரயில்வேயில் ரத்து செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கான பணத்தைத் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தும் கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி வங்கி
கணக்கில்பணம் எடுக்கப்பட்டு முன்பதிவு செய்யப்படாவிட்டால், அதற்கு மறுநாள் தானியங்கி முறையில் பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையை ஐ.ஆர்.சி.டி.சி. தொடங்கும். நெட் பேங்க்கிங், வாலட், கேஷ் அட்டைப் பரிவர்த்தனைகளுக்கு 3 முதல் 4 வேலை நாட்களுக்குள் பணம் திரும்ப செலுத்தப்படும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 6 முதல் 7 நாட்களுக்குள் திரும்ப செலுத்தப்படும்.இந்த தகவலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
Next Story