CAA சட்டம்.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.. ரத்தாகுமா?
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை கோரிய இடையீட்டு மனுக்களுக்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் மார்ச் 11-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த நிலையில், இதற்கு தடை கோரி பல்வேறு தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, 20 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பதில் அளிக்க அவகாசம் தேவை என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். புதிய சட்டத்தின் கீழ் யாராவது குடியுரிமை பெற்றால் மனுக்கள் பயனற்று போய்விடும் என்பதால், யாருக்கும் குடியுரிமை வழங்க மாட்டோம் என அரசு உறுதி அளிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து 3 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.