ஒரு வார்த்தை கூறிய பஸ் ஓட்டுநர்..அலறி அடித்து இறங்கி ஓடிய பயணிகள் - அதிர்ச்சி காட்சிகள்
பெங்களூருவின் மகாத்மா காந்தி சாலைக்கு அருகே உள்ள
அணில் கும்பளே சதுக்கம் அருகே சென்ற மாநகர பேருந்து
ஒன்றின் இஞ்சின் பகுதியில் இருந்து இன்று காலை, திடீரென
புகை வந்தது. எஞ்சின் தீப்பற்றி எரிய தொடங்கியதால் பேருந்து ஓட்டுனர், பேருந்தில் இருந்த பயணிகளை எச்சரித்து கீழே இறங்கச் செய்தார். அவர்கள் இறங்கும் போதே தீ பரவத்
தொடங்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்
துறை வீரர்கள், அரை மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள்
கொண்டு வந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story