திடீரென கேட்ட பெரிய சத்தம்.. அரசு பஸ்ஸும் வேனும் நேருக்கு நேர்... நொறுங்கிய வாகனம் நசுங்கிய உடல்...
கேரளாவில் அரசுப்பேருந்து, வேன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். கேரளா மாநிலம் பத்தனம்திட்டா அடூரிலிருந்து பயணிகளுடன் அரசு பேருந்து எர்ணாகுளம் நோக்கி சென்றது. பந்தளம் கேஎம்.சி. சாலையில் பேருந்தும், எதிரே வந்த வேனும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேன் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த 15 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. டெலிவரி வேன் ஓட்டுநர் தூங்கியதே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் அடூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story