பாஜகவுக்குள்ளே கருப்பு ஆடு.. அரசியல் மாற்றங்களை உருவாக்கிய சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்

x

பாஜகவுக்குள்ளே கருப்பு ஆடு.. அரசியல் மாற்றங்களை உருவாக்கிய சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்

பல அரசியல் மாற்றங்களை உருவாக்கிய சம்பவத்தில்

அதிர்ச்சி திருப்பம்.. பாஜகவுக்குள்ளே கருப்பு ஆடு.. எதிர்பாரா ஷாக்கில் தலைமை..

பிரிஜ் பூஷணுக்கு எதிராக எங்களைப் போராடத் தூண்டியதே பபிதா போகத் தான் என சாக்‌ஷி மாலிக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னணியில் நடந்தது என்ன? விரிவாகப் பார்க்கலாம்..

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரை கைது செய்யக்கோரியும் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லியில் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டம் நடத்தினர்...

இதைடுத்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தியதோடு, அவர்களை தர தரவென சாலைகளில் இழுத்து சென்று கைதும் செய்திருந்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், பிரிஜ் பூஷணுக்கு எதிராக மல்யுத்த வீரர்களைப் போராடத் தூண்டியதே, "பாஜகவைச் சேர்ந்த பபிதா போகத் தான்" என சாக்‌ஷி மாலிக் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான், சாக்‌ஷி மாலிக் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக வேண்டும் என பபிதா போகத் விரும்பியதாகவும், அதற்காகவே பிரிஜ் பூஷணுக்கு எதிராக போராட மல்யுத்த வீரர், வீராங்கனைகளை ஒன்று திரட்டி போராடத் தூண்டியதாக கூறியிருப்பது,.. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தப்படுத்தி உள்ளது.

தங்களது இப்போராட்டத்திற்கு, காங்கிரஸ் பின்னணியாக இருப்பதாக பலரும் கூறியது உண்மையில்லை எனவும், அரியானாவில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பாஜக தலைவர்களான பபிதா போகத், தீரத் ரானா தான் எனவும் சாக்‌ஷி மாலிக் கூறியிருப்பது அதிர்ச்சியை மேலும் எகிறச் செய்துள்ளது..

பபிதா போகத்தின் ஆலோசனையின் படியே, தங்களது போராட்டம் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் பாலியல் ரீதியாக பலரும் தொந்தரவுகளுக்கு ஆளாகிய நிலையில், ஒரு பெண் கூட்டமைப்பின் தலைவராக இருந்தால், நன்மை நடக்கும் என நாங்கள் நம்பியிருந்தோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்ற பபிதா போகத்.. 2019ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.. பிறகு, அதே ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தாத்ரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..


Next Story

மேலும் செய்திகள்