34 ஆண்டுகளுக்கு முன் ரூ.20 லஞ்சம் பெற்ற காவலர்.. பின்னால் வந்து சேர்ந்த நினைத்து பார்த்திடாத சிக்கல்

x

பீகாரில் 34 ஆண்டுகளுக்கு முன்பு 20 ரூபாய் லஞ்சம் பெற்ற காவலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 1990ம் ஆண்டு பீகார் சஹர்ஸா ரயில் நிலையத்தில், பெண் காய்கறி வியாபாரியிடம் சுரேஷ் பிரசாத் சிங் என்ற காவலர், 20 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ரயில்நிலைய பொறுப்பாளர் புகார் அளித்தார். இதுகுறித்த வழக்கில் கடந்த 1999ம் ஆண்டு ஜாமின் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, சுரேஷ் பிரசாத்சிங் தலைமறைவானார். இந்நிலையில், 34 ஆண்டுகளுக்குப்பின் வழக்கை விசாரித்த ஊழல் கண்காணிப்பு நீதிமன்றம், சுரேஷ் பிரசாத்சிங்கை கைது செய்து ஆஜர்படுத்த அம்மாநில டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்