24 மணி நேரத்தில் 95 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Flight | Bomb Threat | Thanthi TV
விமானங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தொடர்ந்து இரண்டு வாரங்களாக மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. இதனால், விமான போக்குவரத்து தாமதமாவதுடன், பயணிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், விமான நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் 20க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதே நேரத்தில், அவை அனைத்தும் புரளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 95 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும், சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டம் 1982-ல் திருத்தங்களை மேற்கொள்ளவும் பரிசீலித்து வருகிறது.
Next Story