நடுக்கடலில் பாறையில் மோதிய படகு.. கடலில் விழுந்து தத்தளித்த மீனவர்கள்... | Boat Accident
மங்களூர் அருகே உல்லால் பகுதியை சேர்ந்த நயனா பி.சுவர்ணா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரவீன் சுவர்ணா உட்பட 5 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். பழுதாகி கடலில் நின்ற படகு, பாறையின் அருகே வைக்கப்பட்டிருந்த சர்வே கல்லில் மோதி மூழ்கத் தொடங்கியது. இதையடுத்து, அங்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், 5 பேரையும் மீட்டு, கயிறு கட்டி படகை கரைக்கு இழுக்க முயன்றனர். எனினும் சிறிது தூரத்தில் கயிறு அறுந்ததால், பின்னர் விரைவு படகு மூலம் பழைய துறைமுகத்திற்கு படகை இழுத்துச் சென்றனர். படகில் இருந்த மீன்கள் மற்றும் வலைகள் சேதமடைந்தன. சம்பவம் தொடர்பாக உல்லால் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story