2024 தேர்தல் நடுவே பாஜகவுக்கு எதிர்பாரா மரண அடி.. ஹரியானாவில் கவிழும் ஆட்சி..?

x

ஹரியானாவில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்ப பெறுவதாக அறிவித்திருப்பதால் ஆளும் பாஜக அரசுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சயானி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், 90 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. பாஜவுக்கு 40 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், ஆதரவு தெரிவித்த 7 சுயேச்சை எம்எல்ஏக்களில் 3 பேர் ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதன் காரணமாக ஹரியானா பாஜக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு வரும் அக்டோபரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சுயேச்சை மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்