நெற்றியில் திலகம் வைக்க மறுத்த மம்தா - பாஜக கண்டனம்

x

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில், நெற்றித்திலகம் வைத்துக்கொள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா மறுத்துவிட்டார். மராட்டிய மாநில பாரம்பரிய முறைப்படி, மம்தா பானர்ஜிக்கு நெற்றித் திலகம் வைக்க பெண் வரவேற்பாளர் முயன்றபோது, அதனை ஏற்க மறுத்துவிட்டார். இதற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. மம்தா பானர்ஜிக்கு இஸ்லாமிய பெண்களைப் போல தலையை மூடுவதிலோ, நமாஸ் செய்வதிலோ எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்றும், இந்துக்கள் மீதான அவமதிப்பால் மேற்குவங்கம் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்