கெஜ்ரிவாலுக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா | Amit Shah | BJP | Kejriwal
பா.ஜ.க.வில் 75 வயதானால் ஓய்வு என சொல்லி மூத்த தலைவர்களை ஓரம் கட்டிய மோடி, செப்டம்பர் மாதத்தோடு பதவி விலக வேண்டியதிருக்கும் என கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதற்கு ஐதராபாத்தில் பதிலடி கொடுத்த அமித்ஷா, 75 வயது ஆகிவிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு என்று எந்த விதியும் பா.ஜ.க.வில் இல்லை என்றார். பிரதமர் மோடி மூன்றாவது முறையும் முழுமையாக ஆட்சி செய்வார் எனவும் அவர் தொடர்ந்து இந்தியாவை வழிநடத்துவார் என்றும் அமித்ஷா கூறினார். கெஜ்ரிவாலுக்கு பிரசாரம் செய்யவே இடைக்கால ஜாமீனைதான் உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பதாக அமித்ஷா சுட்டிக்காட்டினார். கைது செய்தது தவறு என கெஜ்ரிவால் மன்றாடியும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை என குறிப்பிட்ட அமித்ஷா, ஜூன் 2 ஆம் தேதி கெஜ்ரிவால் மீண்டும் சரணடைய வேண்டும் என்றார். ஜாமீன் வழங்கியதை குற்றமற்றவர் என புரிந்துக்கொண்டால் கெஜ்ரிவாலுக்கு சட்ட புரிதல் பலவீனமாக இருக்கிறது என்பதே அர்த்தம் எனவும் அமித்ஷா விமர்சித்தார்.