இன்றோடு இறுதிமுடிவு... தலைமேல் தொங்கும் கத்தி; தப்புமா நிதிஷ் தலை..?உச்சகட்ட பரபரப்பில் பீகார்...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பீகார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.....
பீகார் மாநிலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், பாஜக-நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.
நிதிஷ்குமார் திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பின்னர், காங்கிரஸ், ஆர்ஜேடி, இடதுசாரிகளுடன் இணைந்து புதிய கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணியில் இருந்து அண்மையில் நிதிஷ்குமார் விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது பீகார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மொத்தம் 243 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது....
Next Story