"பாஜக ஆட்சியை அகற்றி நாட்டை பாதுகாக்க வேண்டும்"... பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் வேண்டுகோள்

x

"பாஜக ஆட்சியை அகற்றி நாட்டை பாதுகாக்க வேண்டும்"... பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் வேண்டுகோள்

அனைவரும் ஒன்றிணைந்து பாஜக ஆட்சியை அகற்றி நாட்டை பாதுகாக்க வேண்டும் என நிதீஷ் குமார் மற்றும் ல‌ல்லு பிரசாத்

யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பீகார் முதல்வர் நிதீஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர், காங்கிரஸ் இடைக்கால

தலைவர் சோனியா காந்தியை கூட்டாக சந்தித்தனர். 30 நிமிடங்கள் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதீஷ் குமார்,

அனைவரும் ஒன்றிணைவதோடு நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும் சோனியா காந்தியிடம் கேட்டுக் கொண்டதாக

தெரிவித்தார். தொடர்ந்து பேசிய லாலு பிரசாத் யாதவ், பிஹாரில் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை அகற்றியது போல்,

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்

தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும்படி சோனியா காந்தி கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்