கண்முன்னே சல்லி சல்லியாக நொறுங்கிய பிரமாண்ட பாலம் - திறப்பு விழாவுக்கு ரெடியான போது அதிர்ச்சி

x

கண்முன்னே சல்லி சல்லியாக

நொறுங்கிய பிரமாண்ட பாலம்

திறப்பு விழாவுக்கு ரெடியான போது அதிர்ச்சி

பீகாரில் கட்டப்பட்டு வந்த புதிய பாலம் திறப்பு விழாவிற்கு முன்னரே, இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரும்..இடிந்து விழும் பிரிட்ஜும் பிரிக்க முடியாத கதையாக மாறிக்கொண்டே வருகிறது...

கடந்த 2020ம் ஆண்டு பக்ரா ஆற்றில் கனமழையால், ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்தது.

அதே போல், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீகார் மாநிலம் சுபால் பகுதியில் ஆற்றின் மேல் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து பெரும் விபத்து ஏற்பட்டது...

இந்நிலையில், பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த மேம்பாலம் சல்லி சல்லியாக நொறுங்கி விழுந்த காட்சிகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன...

அராரியா பகுதியில் ஆற்றைக் கடக்க முடியாமல் மக்கள் தவித்து வந்த நிலையில், அங்கு ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

ஒரு வழியாக இதற்கு செவி சாய்த்த அரசு, சுமார் 7 கோடி 89 லட்சம் ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கியது.

நீண்ட நாட்கள் நடந்து வந்த கட்டுமானப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.

இன்னும் ஒரு சில நாட்களில் பாலம் திறப்பு விழா நடைபெறும் என மக்கள் எதிர்ப்பார்ப்பில் இருக்க, திடீரென இடிந்து விழுந்தது பாலம்....

பாலம் இடிந்து ஆற்றில் விழ...பாலத்தின் இடிபாடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன...

இந்த விபத்தின் போது அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை என்பதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக ஒருவித பீதியுடன் தெரிவிக்கின்றனர் மக்கள்.

மேலும், பாலத்தை ஒப்பந்ததாரர் தரமற்ற முறையில் கட்டியதாகவும், இதனால் பாலத்தின் 3 தூண்கள் தண்ணீரிர் அடித்து செல்லப்பட்டதால் பாலம் இடிந்து விழுந்ததாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த விபத்துக்கு கட்டுமான ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ள அப்பகுதி எம்.எல்.ஏ. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்