பாரத ரத்னா விருது... - வெளியான முக்கிய அப்டேட்

x

மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பாரத ரத்னா விருதுகள், வரும் 30-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா, இந்த ஆண்டு 5 பேருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பீஹார் முன்னாள் முதலமைச்சர் கற்பூரி தாக்கூர், முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், நரசிம்மராவ், வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கான விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார். இவர்களில் அத்வானியை தவிர மற்ற அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினர் விருதினை பெற்றுக் கொள்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்