மிஸ்ஸான அயோத்தி.. அதிர்ந்த பெங்களூரு.. நாட்டை உலுக்கிய குண்டு வெடிப்பு.. வெளியான திடுக் தகவல்கள்

x

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள், அம்மாநில பாஜக அலுவலகத்தில் குண்டு வெடிப்பை நடத்த முயற்சி செய்திருக்கிறார்கள் என தேசிய புலனாய்வு பிரிவு குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது

முசாவிர் ஹுசைன், அப்துல் மதின் தாஹா, மாஸ் முனீர் மற்றும் முஸ்ஸாமில் ஷெரீப் ஆகியோர் மீது பெங்களூரு NIA நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், முசாவிர் ஹுசைன் மற்றும் அப்துல் மதின் தாஹா இருவரும் பெங்களூருவில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டு வெடிப்பை நடத்த முயற்சி செய்திருக்கிறார்கள். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி குண்டு வெடிப்பை நடத்த திட்டமிட்டவர்களால், அங்கு குண்டை வைக்க முடியவில்லை என்றும் அதற்கு பிறகே ராமேஸ்வரம் கஃபேயில் குண்டை வைத்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவமோகாவை சேர்ந்த முசாவிர் ஹுசைன் மற்றும் அப்துல் மதின் தாஹா, அல்-ஹிந்த் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள். 2020-ல் இருந்து தேடப்பட்டு வந்த அவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்காக மாஸ் முனீர் மற்றும் முஸ்ஸாமில் ஷெரீப் போன்ற இளைஞர்களை சேர்த்துள்ளனர் எனவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கை தகவல் கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்