சிறையிலிருந்து வெளியே வந்ததும் கணவனை தீர்த்து கட்டிய மனைவி - காபி தோட்டத்தில் நடந்தது என்ன?
எட்டு கோடி பணத்திற்காகக் கணவனை எரித்த கொன்ற மனைவி மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்த சம்பவம் கர்நாடகாவை அதிரச் செய்து இருக்கிறது கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள தனியார் காபி எஸ்டேட்டில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்து இடமான முறையில் தெலுங்கானா பதிவெண் கொண்ட பென்ஸ் கார் சென்றது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் எரித்து கொலை செய்யப்பட்டவர் தெலுங்கானவை சேர்ந்த ரமேஷ் என்பதும் அவரது கார் தான் குடகு எஸ்டேட் பகுதிக்கு வந்து சென்றதும் தெரியவந்துள்ளது. ரமேஷ் தெலுங்கானாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
Next Story