பெங்களூரு மகாலட்சுமி ஜுவல்லர்ஸ்-ஐ அதிரவிட்ட சென்னை நபர்..45 நிமிடத்தில் மொத்தமும் முடிந்தது

x

பெங்களூருவில் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் போல் நடித்து, நகைக்கடை ஒன்றில், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கத்தை கொள்ளையடித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு கே.ஆர்.புரத்தில் மகாலட்சுமி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, ஹால்மார்க் முத்திரை இல்லாமல் நகைகள் விற்கப்படுவதாக‌ குற்றம்சாட்டி, தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் போன்று சிலர் சோதனை நடத்தியுள்ளனர். 45 நிமிடம் சோதனை நடத்திய பின்னர், நகைகளில் உள்ள முத்திரையில் சந்தேகம் இருப்ப‌தாக‌க் கூறி, ஒரு கிலோ தங்க நகைகள், ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், சிசிடிவி பதிவுகளையும் எடுத்துக்கொண்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் கொடுத்துவிட்டு காரில் வேகமாக புறப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், சந்தேகம் வந்து நகைக்கடையில் இருந்தவர்கள் புகார் அளித்த‌தால், காவல்துறையினர், விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் காரில் இருந்த சம்பத் குமார், ஜோதி தாமஸ், அவினாஷ், சந்தீப் ஆகிய 4 பேரும், போலி அதிகாரிகள் என்பதும், சம்பத்குமார் மீது பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்த‌து. இதையடுத்து, கொள்ளைக்கு முளையாக செயல்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்