விளையாட செல்போன் கொடுக்காததால்- தம்பியை தீர்த்துக்கட்டிய அண்ணன் - பெங்களூரு அருகே அதிர்ச்சி சம்பவம்

x

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பசவராஜ் குடும்பத்தினர், கடந்த 3 மாதங்களாக, பெங்களூரு அருகே உள்ள நெருகே கிராமத்தில் தங்கியிருந்து கட்டட வேலைகள் செய்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகன் சிவக்குமார், பெற்றோருடன் தங்கியிருந்து வேலை செய்து வந்த நிலையில், இளைய மகன் பிரணேஷ், பாட்டி வீட்டில் தங்கியிருந்து 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையில் வீட்டுக்கு வந்த பிரணேஷுக்கும் சிவக்குமாருக்கும் இடையே செல்போனில் கேம் விளையாடுவதில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரணேஷ் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக, பெற்றோரிடம் சிவக்குமார் கூறியுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த சார்ஜாபுரா போலீசார் விசாரித்ததில், சிவக்குமார் தனது தம்பியை சுத்தியலால் அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்