சாலைகளை சீரமைக்க வங்கியில் கடன் கர்நாடக இளைஞர்கள் கையில் எடுத்த முயற்சி

x

கிழக்கு பெங்களூருவில், சிட்டிசன்ஸ் மூவ்மெண்ட் என்ற அமைப்பு தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலைகள் மோசமாக இருப்பது குறித்து மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். ஒரு கட்டத்தில் போதிய நிதி இல்லாததால், பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில், அந்த அமைப்பைச் சேர்ந்த ஆரிப் முத்கல் என்பவர், வங்கியில், 2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி அதை சாலை பணிகளுக்காக செலவிட்டுள்ளார். மேலும், வளர்ச்சி இல்லாத நிலையில், வரியை ஏன் செலுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பி, அந்த இளைஞர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்