"என் ஓட்டு YSR காங்.,க்கு தான்" - கடன் வாங்கியவர்களிடம் கற்பூர சத்தியம்.. வங்கி தலைவர் செய்த வினோத செயல்
ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் திருப்பதி அருகே கொரலகொண்டாவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி மாவட்ட டவுன் வங்கியின் தலைவர் ஜெயச்சந்திரா என்பவர், வங்கியில் கடன் வாங்கியவர்களை கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஆளும்கட்சியான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு, அவர்களை கற்பூரம் ஏற்ற வைத்து சத்தியம் வாங்கியுள்ளார். இந்த காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், திருப்பதி மாவட்ட டவுன் வங்கி தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, என்டிஏ கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
Next Story