"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.." - மாவோயிஸ்ட்டுக்கு கைவிலங்கு போட வைத்த காதல்

x

தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த அனிரூத் ராஜன் உப்பாரபேட்டை பகுதியில் தங்கியிருப்பதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவரது நடமாட்டத்தை கண்காணிக்க தொடங்கிய போலீசார், பேருந்து நிலையத்திலிருந்து வெளியூருக்கு செல்ல தயாராக இருந்தபோது கைது செய்தனர். அனிரூத் ராஜன் நக்சல் இயக்கத்திற்கு பணம், ஆட்களை சேர்க்கும் பணியை செய்து வந்ததாகவும் பல ஆண்டுகளாக தீவிரவாத ஒழிப்பு படை கண்களில் மண்ணை தூவி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அனிரூத் ராஜன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நபர் என்றும் போலி ஆதார் அட்டையை எடுத்து சுற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் இருந்து செல்போன், பென் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அனிரூத் ராஜனை போலீசார் காவலில் எடுத்துள்ளனர். அவரது காதலியிடமும் விசாரிக்க பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்