பெங்களூரு டெஸ்ட் - போராடும் இந்திய அணி
பெங்களூரு டெஸ்ட் - போராடும் இந்திய அணி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது.
பெங்களூருவில் நடைபெற்று வரும் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு சுருண்ட நிலையில், நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, 356 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், மூன்று விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது. 125 ரன்கள் பின் தங்கியுள்ள இந்திய அணி, இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாட உள்ளது.
Next Story