முதுகில் குத்திய காதலிக்கு பதிலாக தோழி உயிர் எடுத்த வினோத காதலன்..பெங்களூரை குலைநடுங்க விட்ட கொடூரம்
பெங்களூரில் பெண்கள் விடுதிக்குள் புகுந்து இளம்பெண் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
கர்நாடக தலைநகர் பெங்களூருவின் கோரமங்களா பகுதியில் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. இதில் தங்கியிருந்த பீகாரை சேர்ந்த கிருத்திகா குமாரி என்ற பெண்ணை இளைஞர் ஒருவர் சரமாரியாகக் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் குறித்து
போலீஸ் நடத்திய விசாரணையில், போபாலை சேர்ந்த கரிமா ராத்தோட் என்ற பெண் கிருத்திகாவுடன் தங்கி இருந்து இருக்கிறார்.கரிமா ராத்தோட் மத்தியபிரேதேசத்தை சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞரை காதலித்து வந்து இருக்கிறார்.ஆனால் அபிஷேக் வேலைக்கு செல்லாமலும், அவரது நடவடிக்கையும் சரி இல்லாததால் அவரை விட்டு பிரிந்து இருக்கிறார் கரிமா. இதன் பின்னர் அபிஷேக் அடிக்கடி விடுதிக்கு வந்து பிரச்சனையில் ஈடுபட்டு இருக்கிறார்.இதனால் கிருத்திகா உதவியுடன் வேறு ஒரு
விடுதிக்கு மாறி இருக்கிறார் கரிமா. இதனை அறியாத அபிஷேக் கரிமாவை கொலை செய்ய நோக்கில் விடுதிக்குள்புகுந்து கிருத்திகாவின் அறைக்கு சென்று இருக்கிறார்.ஆனால் அங்கு கரிமா இல்லாததால் ஆத்திரத்தில் கிருத்திகாவை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியது தெரிய வந்துள்ளது. போபலுக்கு தப்பி சென்ற அபிஷேக்கை பிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் கிருத்திகா குத்தி கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.