"மெட்ரோ ரயிலில் விவசாயி செல்ல தடை..கலீஜான டிரஸ்.." வார்த்தையை விட்ட ஆஃபீசர். கொந்தளித்த சக பயணிகள்
ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு துணி மூட்டையை சுமந்தபடி வந்துள்ளார் ஒரு விவசாயி... அவரது உடை அழுக்காக இருந்ததாகக் கூறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் விவசாயியை மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்... சக பயணிகள் இதைத் தட்டிக்கேட்ட நிலையில் அங்கு பரபரப்பு நிலவியது... பொது போக்குவரத்து அனைவருக்கும் பொதுவானது என்னும்போது, நாட்டின் முதுகெலும்பான விவசாயிக்கு அழுக்கு உடையைக் காரணம் காட்டி அனுமதி மறுப்பீர்களா என சக பயணிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்... இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது... ஒருகட்டத்தில் அந்த விவசாயி தான் மெட்ரோ ரயிலில் செல்லவே இல்லை என்று கூற முடிவெடுத்த நிலையில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு விவசாயி அனுமதிக்கப்பட்டார்... இந்த வீடியோ அதிகமாக பரவிய நிலையில், ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் பாதுகாப்பு பொறுப்பாளர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.