"வேட்டி கட்டி வந்தால் மாலுக்குள் விட முடியாது.." - இணையத்தில் பரவும் வீடியோ -பெங்களுருவில் அதிர்ச்சி

x

ஒரு முதியவர் தனது குடும்பத்துடன் திரைப்படம் பார்க்க வந்தார்... ஆனால் அவர் வேட்டி அணிந்திருந்ததால் பாதுகாவலர் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை... குடும்பத்துடன் வந்திருப்பதாக கூறியும் ஏற்றுக் கொள்ளாத அந்த பாதுகாவலர் முதியவரை மாலை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார்... இந்த சம்பவம் வீடியோ எடுக்கப்பட்ட நிலையில் அதைப் பார்த்த பாதுகாவலர் இறுதியாக முதியவர் உள்ளே செல்ல அனுமதிக்கிறார்... இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தீவிரமாக பரவிய எஇலையில், கன்னட மற்றும் விவசாயிகள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்... பிரச்சினை தீவிரமாவதைக் கண்ட அந்த பாதுகாவலர் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்