"பெங்களூரு கம்பளா - நம்ம கம்பளா" - தயாராகும் மக்கள் கர்நாடக கலாச்சார திருவிழா

x
  • கர்நாடகத்தில் கலாச்சார திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டுப் போட்டியான கம்பளா இன்றும், நாளையும் பெங்களூரு கம்பளா - நம்ம கம்பளா என்ற பெயரில் நடைபெறுகிறது..
  • உடுப்பி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு நடத்தப்படும் இப்போட்டியின் போது தண்ணீர் நிரப்பப்பட்ட சேற்றுப் பாதையில் உரிமையாளர்கள் தங்கள் எருமைகளை ஏரில் பூட்டி மின்னல் வேகத்தில் ஓட்டிச் செல்வர்..
  • இப்போட்டிக்காக பெங்களூரு பல்லாரி சாலையில் உள்ள அரண்மனை மைதானத்தின் கிழக்கு திசையில் ராட்சத ஓடுபோதை அமைக்கப்பட்டுள்ளது.
  • இதில் சுமார் 200 ஜோடி எருமை மாடுகள் கலந்து கொள்ள உள்ளன..
  • இந்த போட்டியை மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி புனித்ராஜ்குமார் தொடங்கி வைக்க உள்ளார்.
  • இதில் முதல்வர் சித்தராமையா, நடிகை அனுஷ்கா ஷெட்டி, நடிகர் சிவராஜ்குமார், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்..
  • பெங்களூரு நகரில் முதல் முறையாக நடத்தப்பட உள்ள இந்த போட்டியைக் காண சுமார் 5 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • முக்கிய பிரபலங்கள் வருகை தர உள்ளதால் அரண்மனை மைதானத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்