"ACCESS DENIED" - அதிர்ந்து போன IT ஊழியர்... ரூ.3.5 கோடியை சுருட்டிய சைபர் கும்பல் | Cyber Crime

x

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பொறியாளர் ஒருவர், சுமார் மூன்றரை கோடி ரூபாய் பணத்தை சைபர் குற்றவாளிகளிடம் இழந்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த பொறியாளர், தனது கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென "ACCESS DENIED" எனும் செய்தி திரையில் தோன்றியது. அதனை தொடர்ந்து, மும்பை போலீஸ் மற்றும் சிபிஐ அதிகாரிகள் என தங்களை அடையாளம் காட்டிய சிலர், அவரை தொடர்பு கொண்டு,

அவர் நம்பும் வகையில், அவரது தனிப்பட்ட விவரங்கள் சிலவற்றை கூறி, கிரிப்டோ கரன்சியில் மோசடி செய்துள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், வங்கிக்கணக்கு குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.

அவர்களது பேச்சை முழுமையாக நம்பிய அந்த பொறியாளர் தனது வங்கி விவரங்களை பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, வங்கி கணக்கில் உள்ள பணத்தை சிபிஐ முடக்கி வைத்திருப்பதாக கூறி, பொறியாளரின் வங்கிக் கணக்கிலிருந்து 3 கோடியே 56 லட்சம் ரூபாயை தங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளனர்.

இதுகுறித்து பெங்களூரு போலீசில் புகார் அளித்த நிலையில், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்