சட்டசபையில் போராட்டத்தில் குதித்த நடிகர் பாலையா
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகள், அமராவதியில் உள்ள சட்டசபை முன்பாக போராட்டம் நடத்தினர். திறன் மேம்பாட்டுக்கழக ஊழல் வழக்கில், தெலுங்கு தேசம் கட்சித்தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆந்திர சட்டசபை இன்று கூடும் நிலையில், சந்திரபாபு நாயுடு போலியான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் சட்டசபையின் மையப் பகுதிக்குச் சென்று, தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பினர்.
Next Story