1100 டன் பிரமாண்ட ரயிலை கவிழ்க்க சதியா? பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்தில் பேரதிச்சி தகவல்
1100 டன் பிரமாண்ட ரயிலை கவிழ்க்க சதியா?
பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்தில் பேரதிச்சி தகவல்
நடுங்க வைக்கும் உண்மை... பின்னணியில் யார்?
பாக்மதி ரயிலின் விபத்து குறித்து வெளியான விசாரணை தகவல் இதன் பின்னணியில் பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில் வேகமெடுத்து வரும் நிலையில் அதிர்ச்சி தகவல் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..
பாக்மதி ரயில் விபத்து குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்
கர்நாடகாவிலிருந்து பீகார் நோக்கிப் புறப்பட்ட பாக்மதி எக்ஸ்பிரஸ் 1000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட போது அடுத்து சில மணி நேரங்களில் நடக்க இருந்த விபரீதம் யாருடைய யூகத்திற்கும் எட்டாத ஒன்று..
1100 டன் எடையுள்ள ரயிலானது மணிக்கு 75 கி.மீ வேகத்தில்
சரக்கு ரயில் பெட்டியில் மோதிய போது ஏற்பட்ட அதிர்வு சில கிலோ மீட்டர் வரை அதிர்வை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் 20 பேர் மட்டுமே லேசான காயத்துடன் தப்பித்தனர் என்பதே அதிசயம் தான். யின் லயனில் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் லூப் லயனில் சென்றதே விபத்து காரணம் என ஆரம்ப நிலையில் கூறப்பட்டது.
விபத்து குறித்து தீவிரம் காட்டும் மூன்று விசாரணை அமைப்புகள். விபத்து குறித்து என்.ஐ.ஏ, ரயில்வே வாரியம், ரயில்வே போலீசார் என ஒவ்வொருவரும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில் கவரப்பேட்டையில் ரயில் தண்டவாளத்தில் இருந்த 3 நட்டுக்கள், பொன்னரியில் 6 நட்டுக்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
அதேபோல சில இடங்களில் ஜங்ஷன் பாயிண்ட்கள் காணாமல் போனதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நட்டுக்களை கழற்றியது யார் ?
நட்டுக்கள் மற்றும் ஜங்ஷன் பாயிண்ட்கள் கழற்றப்பட்டதா ? அல்லது இவை திருடப்பட்டிருக்கலாமா ? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் நடந்த சம்பவம் இயந்திர கோளாறினால் விபத்து ஏற்படவில்லை என்பதை ரயில்வே போலீசார் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.
மேலும் 51 B பாயிண்ட் என்ற இடத்தில் தான் ரயில் தண்டவாளம் மாறும் பகுதி அமைந்துள்ளது.அந்த பகுதியில் உள்ள நட்டுக்கள் கழற்றப்பட்டதால் தான் அது செயல் படவில்லை என்பதும், அதனால் தான் ரயிலானது லூப் லையனனில் சென்று விபத்து ஏற்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்த தகவல் திகிலை ஏற்படுத்தி இருக்கிறது.
பாக்மதி ரயில் விபத்தின் பின்னணியில் சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்ற கேள்வி எழுந்ததுள்ள நிலையில், இதன் பின்னணியில் தீவிரவாத கும்பல் இருக்கலாமா என்ற சந்தேகமும் போலீசாருக்கு வலுத்து இருக்கிறது.