நாட்டை உலுக்கிய பவர்புல் அரசியல் தலைவர் கொலை.. கொலையாளிகள் கொடுத்த பேரதிர்ச்சி வாக்குமூலம்
யூட்யூபில் வீடியோக்களை பார்த்து முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் குர்மெல் சிங் மற்றும் தர்மராஜ் காஷ்யப் ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
காஷ்யப் ஆகிய இருவரும் யூட்யூப்பை பார்த்து துப்பாக்கி சுடுவதற்குப் பயிற்சி எடுத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது வரை பாபா சித்திக் கொலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ளவர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
Next Story