மாஜி அமைச்சர் பாபா சித்திக் படுகொலை - பின்னணியில் பிரபல தாதா கேங்.. - அதிர்ச்சி தகவல்

x

மும்பையில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலைக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் நேற்றிரவு பாந்த்ராவில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவ்வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியானது. சிறையில் இருந்தவாறே பல்வேறு குற்றச் செயல்களுக்கு மூளையாக செயல்பட்டு வரும் லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பாபா சித்திக் கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. பிஷ்னோயின் கும்பலில் மொத்தம் 700க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள சிறிய மற்றும் பெரிய ரவுடிகளுடன் பிஷ்னோய்க்கு தொடர்பு உள்ளது. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா, ஆப்கானைப் பூர்வீகமாக கொண்ட டெல்லியை சேர்ந்த ஜிம் உரிமையாளர் கொலை வழக்கிலும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்