அயோத்தியில் ராமரை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அயோத்திக்கு வருகை தருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று, அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story