``அயோத்தி ராமருக்கே இந்த நிலையா..?'' மழைக்கே தாங்காத மேற்கூரை - வேதனையில் குமுறும் பக்தர்கள்

x

அயோத்தி ராமர் கோவிலின் பிராண பிரதிஷ்டை முடிவடைந்து 6 மாதங்களேயாகும் நிலையில், கனமழையால் கோவில் மேற்கூரை ஒழுகுவதாக கோவிலின் தலைமை அர்ச்சகர் வேதனை தெரிவித்திருக்கிறார்...

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவிலில் கடந்த ஜனவரி மாதம், பால ராமருக்கு பிரமாண்ட முறையில் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. அரசியல் களத்தில் இந்நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பால ராமர் இருக்கும் கருவறையில் மழைநீர் ஒழுகுவதாக குற்றஞ்சாட்டிய கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ், உலக நாடுகளை சேர்ந்த பொறியாளர்கள் கட்டிய கோவிலில் இப்படிப்பட்ட குறைகள்ஆச்சரியமளிப்பதாக வேதனை தெரிவித்திருந்தார். இந்த நிலை தொடரும் பட்சத்தில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் பேசு பொருளாகியுள்ள நிலையில், கட்டுமான பணிகள் நிறைவடையும் போது இது போன்ற மழைநீர் கசிவு பிரச்சனைகள் நின்று விடும் என கட்டுமான நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்