அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.1.21 கோடி நன்கொடை கொடுத்த பாஜக வேட்பாளர்

x

உத்தரப்பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மகன் கரண் பூஷன் சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரிஜ் பூஷன் சரண்சிங் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கைசர்கஞ்ச் தொகுதியில் தனக்கு பதிலாக தன் மகனை போட்டியிடவைத்துள்ளார். அதேபோல் தினேஷ் பிரதாப் சிங்கை ரேபரேலி தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. தினேஷ் பிரதாப் சிங், அயோத்தி ராமர் கோயில் வளர்ச்சி திட்டங்களுக்கு 1.21 கோடி ரூபாய் நன்கொடைத் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்