அயோத்தி ராமர் கோயிலில் கால் எடுத்து வைத்த முதல் வெளிநாட்டு தலைவர்
ஃபிஜி துணை பிரதமரும், இந்தியாவை பூர்விகமாக கொண்டவருமான பீமன் பிரசாத், அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் அயோத்தி விமான நிலையம் வந்தடைந்த அவர், கடந்த மாதம் திறக்கப்பட்ட ராமர் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். ஆங்கிலேயர் காலத்தில் தங்கள் குடும்பத்தினர், ஃபிஜி தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அப்போது, பகவத் கீதை, ராமாயணம் போன்ற நூல்களை அவர்கள் எடுத்துச் சென்றதாகவும் கூறினார். ராமர் கோயிலுக்கு வருகை தந்த முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையை பீமன் பிரசாத் பெற்றுள்ளார்.
Next Story