திருப்பதி செல்வோர் கவனத்திற்கு..! அடுத்த 10 நாட்கள்... வெளியான முக்கிய அறிவிப்பு

x

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது... இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் 10 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்படும். நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன்களை ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம். இம்மாதம் 29ஆம் தேதி ஏற்பட இருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28ஆம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படும். மீண்டும் மறுநாள் அதிகாலை மணி 3.15க்கு நடை திறக்கப் படும். தொடர்ந்து கோயில் முழுவதும் சம்பிரதாய ரீதியில் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை ஆகிய சேவைகள் ஏழுமலையானுக்கு நடத்தப்படும். தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.


Next Story

மேலும் செய்திகள்