முதல்வரானதில் இருந்து அதிரடி காட்டும் அதிஷி.. அதிரும் டெல்லி
டெல்லியில், சாலைகளின் தரம் குறித்து முதலமைச்சர் அதிஷி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெல்லி ஒக்லா பகுதியில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்குள் அனைத்து சாலைகளும் முழுமையாக சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். முதற்கட்டமாக, தீபாவளிக்குள், சாலைகளில் ஆங்காங்கே உள்ள பள்ளங்கள் சரிசெய்யப்படும் என்றும் அதிஷி குறிப்பிட்டார். இதனிடையே, டெல்லி பத்பர்கஞ்ச் பகுதியில், சாலைகளின் தரம் குறித்து அமைச்சர் சவுரப் பரத்வாஜ், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மணீஷ் சிசோடியா ஆகியோர் பார்வையிட்டனர்.
Next Story