உளவுத்துறை கொடுத்த சிக்னல்.. பிசிறு தட்டாமல் தட்டி தூக்கிய போலீஸ் | Thanthitv
அசாமின் கச்சார் மாவட்டத்தில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.2 கிலோ எடையுள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... தோலாய் மற்றும் சில்சார் பகுதிகளில் உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், கச்சார் மாவட்ட காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி இந்த போதைப் பொருள்களைக் கண்டறிந்துள்ளனர்... மேலும் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story