கெஜ்ரிவால் மாறியதும் புகுந்த பாஜக.. ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி முதல்வர் இல்லத்தை அரவிந்த் கெஜ்ரிவால் காலி செய்துள்ள நிலையில், அந்த இல்லத்தை முதல்வர் அதிஷிக்கு ஒதுக்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், டெல்லியில் தேர்தலில் வெற்றி பெற முடியாத பாஜக
தற்போது டெல்லி முதல்வர் இல்லத்தையும் கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் இல்லத்தை தன்னுடைய முகாம் அலுவலகமாக மாற்றி உள்ள அதிஷி, தொடர்ந்து பல்வேறு சந்திப்புகளை நடத்தி வரும் நிலையில், தற்போது அங்கு பணியாற்றி வந்த ஊழியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story