"குறுக்க எது வந்தாலும் தடுக்க முடியாது" - இந்திய ராணுவத்திற்கு கிடைத்த பொக்கிஷம்

x

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தானியங்கி ஆளில்லா விமானத்தை டிஆர்டிஓ அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு, இந்திய ராணுவத்திற்கு தளவாடங்களை உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது. இந்த நிறுவனம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா பறக்கும் விமானத்தை, கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள விமான ஓடுதளத்தில் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது, இந்திய பாதுகாப்புத் துறையில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், விமானம் பறக்கும்போது, வழித்தடத்தில் ஏதேனும் குறுக்கிட்டாலோ அல்லது தரையிறங்கும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ தானாகவே இறக்கைகள் சரிசெய்து கொண்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்