டெல்லி முதல்வர் விவகாரம்..அலறும் அரசியல் களம்.. குரல் கொடுக்கும் முக்கிய புள்ளிகள்

x

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் இந்திய கூட்டணி கட்சிகள் புகார் அளித்துள்ளன. காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்கி, திமுகவின் சார்பில் எம்.பி வில்சன், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்தனர். ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப மத்திய விசாரணை அமைப்புகள் அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில் கைது செய்யப்பட்டிருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்