விரைவில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது..? - ஆம் ஆத்மி அமைச்சர் பரபரப்பு பேட்டி
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டு மூன்று நாட்களில் கைது செய்யப்படலாம் என, டெல்லி அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பா.ஜ.க அழுத்தம் தருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கைது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி அச்சப்பட்டிருந்தால் சிறைக்கு சென்ற தலைவர்கள் சரணடைந்திருப்பார்கள் எனத் தெரிவித்த சவுரவ் பரத்வாஜ், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற ஆம் ஆத்மி தொடர்ந்து போராடி வருவதாக குறிப்பிட்டார்.
Next Story